புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'
நெல்லை மேலப்பாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.;
நெல்லை மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீசார் ஆய்வு நடத்தினர். கடந்த ஜூலை மாதம் 29-ந்தேதி மத்திய சிறைசாலை எதிரில் உள்ள டீக்கடையில் உரிமையாளர் நேசகுமார் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதை கண்டுபிடித்தனர். ஏற்கனவே 2022-ம் ஆண்டு முதல் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மேலப்பாளையம் போலீசார் அளித்த கடிதத்தின் அடிப்படையில் சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால்வேனா அந்த டீ கடைக்கு சீல் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து நேற்று மாலை மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம், சப்-இன்ஸ்பெக்டர் எபநேசர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா, டீக்கடைக்கு சீல் வைத்தார்.
இதை தொடர்ந்து மேலப்பாளையம்- அம்பை ரோட்டில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த நூடுல்ஸ் ½ கிலோ, மைனஸ், பொதுமக்கள் முன்னிலையில் கிருமிநாசினி தெளித்து அழித்தனர். தரமில்லாத பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்கள் பொதிந்து வைக்கப்பட்டிருந்தது. பொதிவதற்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த உணவுத்தரமல்லாத பிளாஸ்டிக் பைகள் 7 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. 5 கடைகள் மீது, சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருளை கையாண்டதற்காக ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.