நிழற்குடையை மீண்டும் கட்ட வேண்டும்

வலசையில் நிழற்குடையை மீண்டும் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-10 11:33 GMT

வாணாபுரம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் பழையனூர் அருகே வலசை கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் முன்பகுதியில் நிழற்குடை இருந்தது. இந்த நிழற்குடை சேதமானதால் புதிய நிழற்குடை கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமான நிழற்குடை இடிக்கப்பட்டது. ஆனால் அங்கு மீண்டும் நிழற்குைட கட்டவில்லை. இதனால் அங்கு கட்டிட கழிவுகள் அப்படியே உள்ளது.

எனவே, அதனை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்