விழுப்புரத்தில்தனியார் மருத்துவக்கல்லூரி காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் அய்யனார் (வயது 45). இவர் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2½ வயதில் ரக்ஷன்ராம் என்ற மகன் உள்ளான். அய்யனாரின் அண்ணன் முருகன் (49) என்பவர் அவர்களது பூர்வீக வீட்டில் குடியிருந்து வருகிறார். இதில் பங்கு தரும்படி அய்யனார் கேட்டுள்ளார். அதற்கு முருகன் கொடுக்காததால் மனமுடைந்த அய்யனார், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.