வாரச்சந்தை மைதானத்தில் குப்ைப கொட்டும் அவலம்

வாரச்சந்தை மைதானத்தில் குப்ைப கொட்டும் அவலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-17 17:51 GMT


வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தையொட்டி உழவர் சந்தை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ேமல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஒரு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த வாரச்சந்தை மைதானத்தில் நகராட்சி லாரிகள் மூலம் குப்பைகளை கொண்டு வந்து மலைபோல் கொட்டுகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வாரச் சந்தை மைதானத்தில் குப்பைகளை கொட்டுவதை நகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும். அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வளையாம்பட்டு குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் சென்று கொட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்