நெல்லையில் சுட்டெரிக்கும் கோடை வெயில்

நெல்லையில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

Update: 2023-04-18 22:06 GMT

நெல்லை மாவட்டத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. இதனால் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் மளமளவென்று குறைந்து வருகிறது. நெல்லையில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இங்கு நேற்று அதிகப்பட்சமாக 100.4 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. அதாவது அக்னி நட்சத்திர நாட்களில் அடிக்கின்ற வெயிலை போல் இருந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். துணியால் தலை, முகப்பகுதியை மூடிக்கொண்டு வாகனங்களில் பயணம் செய்தனர்.

சாலையில் நடந்து சென்ற பெண்கள் பலர் குடைபிடித்தபடி சென்றனர். வெயிலின் தாக்கத்தால் குளிர்பானங்கள், இளநீர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய் ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக நடந்தது. ேமலும் நல்லியுடன் கூடிய மண்பானை விற்பனையும் விறுவிறுப்பாக இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்