வெல்டிங் வைத்தபோது ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வேலூரில் வெல்டிங் வைத்தபோது ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-18 16:13 GMT

வேலூர் பிஷப்டேவிட் நகரை சேர்ந்தவர் டேவிட் (வயது 60). இவருக்கு சொந்தமான ஸ்கூட்டியின் ஸ்டேண்ட் உடைந்துள்ளது. அதை சரி செய்வதற்காக அண்ணாசாலையில் போலீஸ் சூப்பிரண்டு பங்களா எதிரே உள்ள வெல்டிங் கடைக்கு கொண்டு சென்றார். அந்த கடையின் ஊழியர்கள் வெல்டிங் மூலம் ஸ்டேண்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பெட்ரோல் டேங்கில் தீப்பொறி பட்டு திடீரென ஸ்கூட்டர் தீப்பற்றியது. தொடர்ந்து பெட்ரோல் டேங்க் மற்றும் ஸ்கூட்டரின் பின்பகுதி முழுவதும் தீப்பிடித்து சுமார் 10 அடி உயரத்துக்கு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் வெல்டிங் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஸ்கூட்டர் மீது மண்ணை கொட்டி தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்