'அதிக வேலைப்பளுவால் கண்ணீர் விட்டு அழும் ஆசிரியை'

‘அதிக வேலைப்பளுவால் கண்ணீர் விட்டு அழும் ஆசிரியை’

Update: 2022-08-25 12:20 GMT

பல்லடம்

பல்லடத்தில் சமூக வலைதளங்களில் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர், கண்ணீர் மல்க பேசிய வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:- "ஞாயிற்றுக்கிழமையான இன்று.நான் எழுதுவதா இல்லை நாளை பள்ளி செல்வதற்கு தயார்படுத்துவதா, சமையல் செய்வதா, அம்மாவை கவனிப்பதா, இந்த வாரத்தின் துணிகளை துவைப்பதா? நாளை, மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். என்ன செய்வது என்றே தெரியவில்லை".க்ஷ இவ்வாறு, கண்ணீர் விட்டு அழுதபடி அவரது செல்போனில் 'செல்பி' எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவை பல்வேறு சமூக வலைதளக்குழுக்களிலும் பதிவிட்டு வரும் ஆசிரியர்கள் 'இது தான் ஆசிரியர்களின் தற்போதைய நிலை, எங்களை கண்ணீர் விடும் நிலைக்கு பள்ளிக் கல்வித்துறை தள்ளியுள்ளது. இவ்வாறு கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ பல்லடம் மற்றும் திருப்பூர் பகுதியில் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

---

Tags:    

மேலும் செய்திகள்