பூலாங்குளம் அரசு பள்ளி மாணவன் மாநில அளவில் முதலிடம்
கலைத்திறன் போட்டியில் பூலாங்குளம் அரசு பள்ளி மாணவன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தான்.
பாவூர்சத்திரம்:
தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்கள் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போட்டியில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் பூலாங்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவன் தங்க சேவாக், சென்னையில் நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி வகுப்புகளுக்கான கலைத்திறன் பிரிவில், காகித கூழ் சிற்பத்திற்கான போட்டியில் பங்கு பெற்று மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார். இவரை பள்ளி தலைமை ஆசிரியை ஜூலியான டெய்ஸி மேரி மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.