பள்ளியை சீரமைக்க வேண்டும்

பள்ளியை சீரமைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை;

Update: 2022-08-21 18:53 GMT

சோளிங்கரை அடுத்த கூடலூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. பள்ளியின் வகுப்பறைக்கு எதிரே தடுப்புச்சுவரின் மீது கம்பி தடுப்பு அமைக்க வேண்டும். பழைய கழிவறைகளை அகற்றிவிட்டு புதிய கழிவறைகளை கட்டித்தர வேண்டும். விளையாட்டு மைதானத்தில் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது. துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்