பெற்றோர்களிடம் தேர்வு எழுத பள்ளி மேலாண்மை குழுவினர் நேரில் ஆலோசனை
இடையில் நின்ற மாணவிகளின் பெற்றோர்களிடம் தேர்வு எழுத பள்ளி மேலாண்மை குழுவினர் நேரில் ஆலோசனை நடத்தினர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் இடையில் பள்ளிக்கு வராமல் இருந்தனர்.
மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா ஏழுமலை, தலைமை ஆசிரியை சுமதி ஆகியோர் தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் ஏழுமலை, ஆசிரியர் கிருபாகரன், ஆசிரியைகள் வாசுகி, ஜெயந்தி, கலைமதி, சாந்தி ஆகியோர் மாணவிகளின் பெற்றோர்களிடம் நேரில் ஆலோசனை வழங்கினர்.
இதையடுத்து இடையில் நின்ற மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்து செயல்முறை தேர்வு எழுதினர்.
மேலும் தொடர்ந்து தேர்வுகள் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பள்ளி மேலாண்மை குழு மற்றும் தலைமை ஆசிரியை ஆகியோர் தெரிவித்தனர்.