கட்டிய பணத்தை முழுமையாக திருப்பி தராத பள்ளி நிர்வாகம்... தீக்குளித்த தாய் - அதிர்ச்சி சம்பவம்
செங்கல்பட்டு அருகே கட்டிய பணத்தை பள்ளி நிர்வாகம் முழுமையாக திருப்பி தராததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அருகே கட்டிய பணத்தை பள்ளி நிர்வாகம் முழுமையாக திருப்பி தராததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
அழகு சமுத்திரம் பகுதியை சேர்ந்த வசந்தகுமாரி என்பவர், தனது மகனை சோகண்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்க 13 ஆயிரம் ரூபாய் முன் தொகை செலுத்தியதாக தெரிகிறது. மீதி தொகையை தவணை முறையில் கட்ட பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால், கட்டிய பணத்தை வசந்தகுமாரி திரும்ப கேட்ட நிலையில், எட்டாயிரம் ரூபாய் மட்டும் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால், கணவருடன் தகராறு ஏற்பட்டு மனமுடைந்த வசந்தகுமாரி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி முன்பு பொதுமக்கள், உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த செங்கல்பட்டு போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.