பள்ளி மாணவிக்கு தொல்லை:போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது
பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டாா்.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, பரங்கிப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவி தினசரி பள்ளிக்கு செல்லும் போது, சின்னூர் வடக்கு கிராமத்தை சேர்ந்த வேலு என்பவரின் மகனும், ஆட்டோ டிரைவருமான பொன்மாறன் (19) என்பவர் மாணவியை பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், மாணவியின் செல்போன் எண்ணையும் எப்படியோ தெரிந்து கொண்டு, போன் செய்தும் தொல்லைகள் அளித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவியின் தந்தை பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குணபாலன், மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்மாறனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.