கஞ்சா, சாராயம் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்

திருக்கோவிலூர் பகுதியில் கஞ்சா, சாராயம் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Update: 2023-05-10 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்து வந்த பழனி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை பூந்தமல்லி சிறப்பு காவல் படையில் உதவி கமாண்டராக பணியாற்றி வந்த மனோஜ்குமார் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக மனோஜ்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் பாபு, பாண்டியன், ராதிகா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் சட்டம்- ஒழுங்கு 100 சதவீதம் முறையாக பராமரிக்கப்படும். குறிப்பாக ஏழை எளிய மக்கள் தங்களுக்கான நியாயம் கிடைக்க என்னை எந்த நேரத்திலும் அலுவலகத்தில் அணுகலாம். கஞ்சா, சாராயம் மற்றும் வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை இருப்பது தெரிய வந்தால் முற்றிலும் தடுக்கப்படும். திருக்கோவிலூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் குறித்து போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் புகார் செய்யலாம். அங்கு நடவடிக்கை எடுக்க வில்லையெனில் என்னை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். அவ்வாறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்