குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Update: 2022-08-08 13:50 GMT

குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. நேற்று காலையில் இருந்தே சாரல் மழை விட்டு விட்டு தூறிக் கொண்டே இருந்தது. வெயில் இல்லை. குளுமையான சூழல் நிலவியது.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்துச் சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்