பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி கைது
பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி கைது செய்யப்பட்டாா்.;
விழுப்புரம் மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகே நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் கருங்கல்லை வைத்துக்கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை அச்சுறுத்திக்கொண்டிருந்தார். உடனே அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் விழுப்புரம் கல்லூரி சாலையை சேர்ந்த ரிச்சர்டு (வயது 48) என்பதும், ரவுடியான இவர் மீது நகர போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரிச்சர்டை போலீசார் கைது செய்தனர்.