பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி கைது
பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி கைது செய்யப்பட்டார்.;
விழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார், ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் கையில் கருங்கற்களை வைத்துக்கொண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்களை தகாத வார்த்தையால் திட்டி அச்சுறுத்திக் கொண்டிருந்தார்.
உடனே அவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், விழுப்புரம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த குமார் மகன் தமிழரசன் (வயது 23) என்பதும், ரவுடியான இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தமிழரசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.