சென்னையில் உள்ள பஸ் நிறுத்தங்களின் மேற்கூரை தரம் குறித்து ஆராய வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னையில் உள்ள பஸ் நிறுத்தங்களின் மேற்கூரை தரம் குறித்து ஆராய வேண்டும் என தமிழக அரசை விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.;

Update: 2022-09-24 11:09 GMT

சென்னை,

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3 ஆயிரத்து 233 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர பஸ்களில் அன்றாடம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள பெரும்பாலான பஸ் நிறுத்தங்களின் மேற்கூரை ஓட்டை உடைசலாக காட்சியளிக்கிறது.

ஒரு சில இடங்களில் மேற்கூரையே இல்லாததால் பயணிகள் உச்சி வெயிலில் பஸ்சுக்காக காத்து கிடக்கும் அவலநிலை ஏற்படுகிறது. பஸ்சுக்காக மழையிலும், வெயிலிலும் பயணிகள் காத்து கிடப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

மக்கள் பிரச்சினைகளை தீர்க்காமல் வெறும் வெற்று அறிக்கைகளையும், அறிவிப்புகளும் வெளியிடும் தமிழக அரசு, சென்னையில் உள்ள அனைத்து பஸ் நிறுத்தங்களின் மேற்கூரை தரமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சேதமடைந்த மற்றும் நிழற்குடைகள் இல்லாத பஸ் நிறுத்தங்களை கண்டறிந்து உடனடியாக அதனை சரிசெய்ய வேண்டும் என தே.மு.தி.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.     


Tags:    

மேலும் செய்திகள்