கடையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது

வந்தவாசியில் கடையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது

Update: 2023-05-15 16:33 GMT

வந்தவாசி

வந்தவாசி காந்தி ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இதில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சரண் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார்.கடையின் மேற்கூரை முற்றிலும் பழுதடைந்த காரணத்தால் கடையை சீரமைத்து தரக்கோரி பலமுறை அவர் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று கடையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. இதனால் கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் சேதமானது.

மேற்கூரை இடிந்து விழும்போது கடையில் இருந்தவர்கள் வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்