அரசு பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு

சென்னை மாநகரபஸ் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இருந்து பொன்னேரி நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது

Update: 2023-05-31 10:20 GMT

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்தபடி சூறாவளி காற்று வீசியது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்பட்டனர். மழை பெய்யாததால் ஏமாற்றமும் அடைந்தனர்.

சென்னை புறநகரில் பலத்த காற்று சாலையில் சென்று கொண்டிருந்த பஸ்சின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. இதனால் பயந்த பயணிகள் டிரைவர் பஸ்சை நிறுத்தியதும், பயணிகள் கீழே இறங்கி ஓடினர்.இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை மாநகரபஸ் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இருந்து பொன்னேரி நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த பஸ் பிரளையம்பாக்கம் கிராமத்தின் அருகே பொன்னேரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்தது.

காற்று வேகமாக வீசியதால் அரசு பஸ்சின் மேற்கூரை காற்றில் சரிந்து கீழே விழுந்தது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். இதையடுத்து பஸ் அருகே சாலையோரமாக நிறுத்தப்பட்டது.

பஸ்சில் வந்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை இது குறித்து செங்குன்றம் பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து சாலையில் விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்