கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

Update: 2022-08-22 22:30 GMT

கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிமுத்து. இவருடைய மகள் எழிலரசி (வயது 19). தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., கணிதம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், தென்குமரை அம்பேத்கர் தெருைவ சேர்ந்த பாண்டியன் மகன் சுரேஷ் (22) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எழிலரசியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து போலீசார் 2 பேரின் பெற்றோரையும் அழைத்து பேசினர். அப்போது எழிலரசியின் பெற்றோர் காதலலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் சுரேசுடன், எழிலரசியை அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்