ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா சொர்ணக்காடு பணஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுகுமாரன் மகள் தீபிகா (வயது 22). பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்த வளப்பிரமன்காடு பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் விவேக் (27). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பட்டுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து ேபாலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து சமரசம் பேசினர். பின்னர் காதல் ஜோடியிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.