வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

Update: 2023-06-28 22:02 GMT

நம்பியூர்

நம்பியூர் அருகே உள்ள சாவக்கட்டுபாளையம் மொட்டணத்தை சேர்ந்தவர் முருகேசன். அவருடைய மகன் கருப்புசாமி (வயது24). இவர் தனியார் கல்லூரியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நம்பியூர் அருகே உள்ள காரப்பாடியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் பேபி ஷாலினி (21). இவர் பி.எஸ்சி. முடித்துள்ளார்.

இந்த நிலையில் கருப்புசாமியும், பேபி ஷாலினியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கருப்புசாமியும், பேபி ஷாலினியும் வீட்டை விட்டு் வெளியேறி நேற்று பண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்