3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரில் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2022-09-08 08:39 GMT

திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வெண்ணிற கொடியேந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் கோதண்டன் தலைமை தாங்கினார். இதில் திரளான நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கையில் வெண்ணிற கொடியேந்தி சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களில் இறந்தோரின் வாரிசுகள் கருணை அடிப்படையில் பணி நியமனம் விரைந்து பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்