தாறுமாறாக ஓடிய ரோடுரோலர் எந்திரம், மரத்தில் மோதியது

கொள்ளிடத்தில் தாறுமாறாக ஓடிய ரோடுரோலர் எந்திரம், மரத்தில் மோதியது.

Update: 2022-11-18 18:41 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் - மகேந்திரப்பள்ளி சாலையில் நேற்று ஒரு ரோடுரோலர் எந்திரம் சென்று கொண்டிருந்தது. கொள்ளிடம் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பிரேக் பிடிக்காததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ரோலர் தாறுமாறாக ஓடியது. அந்த பகுதி பள்ளமாக இருந்ததால் ரோடு ரோலர் வேகமாக சென்றது. பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டீக்கடைக்காரர் மாறன் என்பவரின் மொபட்டின் மீது ஏரியதால் அது நசுங்கியது. பின்னர் அந்த ரோடுரோலர் எந்திரம் அந்த பகுதியில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்