குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
பெரம்பலூர் நகர்ப்பகுதியில் முக்கியமான சாலையான பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் சாலை பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். சேதமடைந்த சாலையால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களில் சிலர் கீழே விழுந்து காயங்களுடன் எழுந்து செல்கின்றனர். இதேபோல் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ் உள்ளே செல்லும் பகுதியில் உள்ள சாலையும், பழைய பஸ் நிலையத்தில் உள்ள சாலையும், அதனை சுற்றியுள்ள சாலையும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.