ஆரணி தொகுதியில் ஆற்று பாசன கால்வாய் ஏரிகள் வேகமாக நிரம்புகிறது
தொடர் மழையால் ஆற்று பாசன கால்வாய் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.
ஆரணி
தொடர் மழையால் ஆற்று பாசன கால்வாய் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.
தமிழக முழுவதும் நேற்று முன்தினம் முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் படவேடு, ஜமுனாமரத்தூர் செண்பகத்தோப்பு போன்ற மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கமண்டல நாக நதி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. அதன் காரணமாக பாசன கால்வாய் வழியாக இதுவரை குன்னத்தூர் ஏரி, ஓட்டேரி ஏரி உள்பட 9 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது, மேலும் 75 சதவீத கொள்ளளவு 3 ஏரிகளில் தண்ணீர் நிறைந்துள்ளது, அதேபோல 13 ஏரிகள் 50 சதவீத அளவில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
இந்த நிலையில் ஏரி கரைகளை பலப்படுத்தும் வகையில், பொதுப்பணித்துறை நீர் நிலை ஆரணி உதவி செயற் பொறியாளர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் ராஜகணபதி தலைமையில் அலுவலர்கள் ஏரி கரைகளை கண்காணித்து வருகின்றனர்.