"கோவில்களின் வருவாய், செலவுகளை மத்திய குழு தணிக்கை செய்வதால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது" - ஐகோர்ட்டு விளக்கம்
மத்திய கணக்கு தணிக்கை குழு தணிக்கை செய்வதால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது .
சென்னை,
கோவில்களின் வருவாய், செலவுகளை மத்திய கணக்கு தணிக்கை குழு தணிக்கை செய்வதால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது .
மேலும் கோவில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் .அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமே அறங்காவலர்களை நியமிக்க கூடாது" அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோவில் பாதுகாப்பு தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய கோரி அறநிலையத்துறை தாக்கல் செய்த மனு மீது சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.