நெல் அறுவடை எந்திரம் தீயில் எரிந்து நாசம்
நெல் அறுவடை எந்திரம் தீயில் எரிந்து நாசமானது.
துறையூர்:
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள கீரம்பூர் வடக்கு வீதியை சேர்ந்தவர் அய்யாதுரை. இவர் சொந்தமாக நெல் அறுக்கும் அறுவடை எந்திரம் வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று கிருஷ்ணாபுரத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவர் தோட்டத்தில் நெல் அறுவடை எந்திரத்தை மக்காச்சோளம் அறுப்பதற்காக வண்டியை ஓட்டி வந்துள்ளார். காலையில் வழக்கம் போல் மக்காச்சோளம் பயிரை அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளார். சிறிது நேரத்தில் திடீரென்று மக்காச்சோளம் அறுக்கும் எந்திரத்தில் தீப்பற்றி உள்ளது. எதிர்பாராத விதமாக அதிக அளவில் மல மலவென தீப்பரவியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அய்யாதுரை வண்டியிலிருந்து குறித்து உயிர் தரப்பினார். உடனடியாக துறையூர் தீயணைக்கும் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த தீயணைக்கும் நிலைய பொறுப்பு அதிகாரி பாலச்சந்தர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து சென்று தீயை அணைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.