தாசில்தார் பணியிடை நீக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்
தாசில்தார் பணியிடை நீக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்
கூடலூர்
கள்ளக்குறிச்சியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களின் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ் முனியன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தாசில்தாரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து மாநிலம் முழுவதும் வருவாய்த் துறை ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் வருவாய் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் தலைமையில் வருவாய் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாசில்தார் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக வருவாய்த்துறை ஊழியர்களின் போராட்டத்தால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.