ஓய்வு பெற்ற ஆசிரியர் நலச்சங்கத்தினர் தர்ணா

நாகையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் நலச்சங்கத்தினர் தர்ணா

Update: 2023-04-17 18:45 GMT


நாகை புதிய பஸ் நிலையம் அருகே ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தினர் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாப்பு ராமநாதன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் கலியபெருமாள் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கண்ணையன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் நடராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். 70 வயது நிறைந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருமான வரி சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரெயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்