திருப்பரங்குன்றத்தில் கொலை செய்யப்பட்டகொத்தனார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
திருப்பரங்குன்றத்தில் கொலை செய்யப்பட்ட கொத்தனார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). கொத்தனார். நேற்றுமுன்தினம் இரவு சுரேசை, மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியின் பிணவறை அருகே சுரேசின் உறவினர்கள் திரண்டிருந்தனர். அவர்கள், சுரேசின் உடலை வாங்க மறுத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. (முன் வந்த செய்தி 14-பக்கம்).