ஏரல் பத்திரப்பதிவு அலுவலகத்தை தாலுகா அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும்; கலெக்டரிடம் வியாபாரிகள் கோரிக்கை

ஏரல் பத்திரப்பதிவு அலுவலகத்தை தாலுகா அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2023-04-22 18:45 GMT

ஏரல்:

ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் தசரதபாண்டியன், செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் அருணாசலம் மற்றும் தொழிலதிபர் அழகுராமகிருஷ்ணன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராைஜ நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதில், "ஏரல் பத்திர பதிவு அலுவலகம் 1954 முதல் 68 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது இந்த கட்டிடம் ஆனது பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் கட்டிடத்தில் உள்ள வெடிப்பு வழியாக தண்ணீர் உள்ளே வருகிறது. இதனால் பத்திர பதிவு அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் சேதம் அடைய வாய்ப்புள்ளது. எனவே மோசமான நிலையில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தை ஏரல் தாலுகா அலுவலகம் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான இடத்தில் செயல்படுத்துமாறு மாற்றி அமைத்து அதற்கு தேவையான இடம் அங்கு ஒதுக்கீடு செய்து அமைத்து தர வேண்டும்" என கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்