கோவில் குளத்தில் மீன்கள் செத்ததுக்கு கழிவுநீர் கலந்ததே காரணம்

கோவில் குளத்தில் மீன்கள் செத்ததுக்கு கழிவுநீர் கலந்ததே காரணம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-06-22 19:29 GMT

திருஉத்தரகோசமங்கை கோவிலில் முன்புறமுள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்கள் செத்து மிதந்தது. இது குறித்து நீர் மற்றும் மீன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு தற்போது வந்துள்ளது. இது குறித்து மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் கூறியதாவது:-

திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் கடந்த 19-ந்தேதி அன்று மீன்கள் இறந்து மிதந்தது. இது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு பரிசோதனைக்காக மீன் மற்றும் நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், அக்குளநீரில் காரத்தன்மை, பைகார்பனேட், நீர் கடினத்தன்மை, அமோனியா, இரும்புச்சத்து, நைட்ரேட் ஆகியவை மீன்கள் வாழ்வதற்கான சராசரி அளவை விட அதிக அளவில் உள்ளது தெரிய வந்துள்ளது.

நீரில் ஆக்சிஜன் அளவும் குறைவாக இருந்துள்ளது. மீன்களை பரிசோதனை செய்ததில் மீன்களின் உடலில் நோய் அறிகுறி எதுவும் இல்லை. எனவே, மீன்கள் திடீர் என இறந்ததற்கு அந்த குளத்தின் நீரில் கழிவு நீர் கலந்ததால் ரசாயன மாற்றம் ஏற்பட்டு நீரில் ரசாயன காரணிகள் அதிகமாகி உள்ளது. மேலும், வெயில் காரணமாக அதிக வெப்பநிலை ஏற்பட்டு நீரில் போதிய வளிமண்டல ஆக்சிஜன் இல்லாமல் போய்உள்ளது. இதனாலேயே மீன்கள் இறந்துள்ளது.

இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்