ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

உத்தமபாளையம் அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-18 18:45 GMT

உத்தமபாளையம் அருகே கோம்பை பேரூராட்சியில் 5-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தரமற்ற முறையில் அரிசி வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை அங்குள்ள திரு.வி.க.தெரு ரேஷன் கடைக்கு லாரியில் அரிசி கொண்டு வரப்பட்டது. இதைக்கண்ட பொதுமக்கள் அந்த லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோம்பை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர் லாரியை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடந்த 2 மாதமாக ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அரிசி பழுப்பு நிறத்தில் தரமற்ற முறையில் இருப்பதாக பொதுமக்கள் கூறினர். இதையடுத்து தரமான அரிசியை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்