வாய்மேடு பகுதியில் வெயிலின் தாக்கத்தை தணித்த மழை

வாய்மேடு பகுதியில் வெயிலின் தாக்கத்தை மழை தணித்தது.

Update: 2023-09-09 19:15 GMT

நாகை மாவட்டம் வாய்மேடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. வாய்மேடு, தாணிக்கோட்டகம், துளசியாப்பட்டினம், மருதூர், ஆயக்காரன்புலம், தகட்டூர், பஞ்சநதிக்குளம், தென்னடார் உள்ளிட்ட கிராமங்களில் ஒரு மணிநேரம் பரவலாக மழை பெய்ததால், அந்த பகுதியில் வாட்டி வதைத்து வந்த வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்