கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நெடுங்கல், பாரூர், சூளகிரி உள்ளிட்ட இடங்களில் குளிர்காற்றுடன் கூடிய மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- நெடுங்கல் - 14.20, பாரூர்- 11.80, சூளகிரி- 10, ஓசூர் -4, போச்சம்பள்ளி -3.40, தேன்கனிக்கோட்டை -3.20, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் தலா 2.20 பதிவானது. நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.