குண்டர் தடுப்பு சட்டத்தில் ரவுடி கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-14 18:41 GMT

விழுப்புரம், 

திண்டிவனம் அருகே தீவனூர் செஞ்சி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரவீன் (வயது 34). ரவுடியான இவரை கொலை முயற்சி வழக்கு தொடர்பாக ரோசனை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பிரவீன் மீது திண்டிவனம், ரோஷனை, வெள்ளிமேடுபேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, நாட்டு வெடிகுண்டு வீச்சு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரின் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு பிரவீனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். இதையடுத்து பிரவீனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசாருக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் இருக்கும் பிரவீனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்காக உத்தரவை சிறை அலுவலர்கள் மூலம் அவரிடம் ரோசனை போலீசார் வழங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்