3 மலைப்பாம்புகள் பிடிபட்டன

குருபரப்பள்ளி பகுதியில் 3 மலைப்பாம்புகள் பிடிபட்டன.

Update: 2023-10-20 19:21 GMT

குருபரப்பள்ளி

குருபரப்பள்ளி அடுத்த புளியஞ்சேரியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தோட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப்புல் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் அங்கு புல் அறுக்க சென்றார். அங்கு 2 மலைப்பாம்புகள் இருந்தன. இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 மலைப்பாம்புகளையும் பிடித்தார். மேலும் குருபரப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இந்த பாம்பையும் அவர்கள் பிடித்தனர். பின்னர் அவர்கள் 3 மலைப்பாம்புகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்