குலசேகரம்,
அருமனை அருகே உள்ள பொன்மனை பெருவல்லிக்கடவு பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டில் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுருண்டு பதுங்கி இருந்தது. இதுகுறித்து வேளிமலை வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனக்காப்பாளர் சரவணன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர் சுமன் ஆகியோர் பிரின்ஸ் வீட்டில் பதுங்கி இருந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பை பெருஞ்சாணி அணை அருகே வனப்பகுதியில் விட்டனர்.