ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது
ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது.;
காரையூர் அருகே உள்ள சம்பப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் தனது ஆடுகளை அங்குள்ள பெரிய கண்மாய் அருகே மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்து கிடந்த மலைப்பாம்பு ஒரு ஆட்டை விழுங்கியது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த நிலையிலான ஆட்டை மீட்டனர். பின்னர் அந்த மலைப்பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.
இதேபோல் அன்னவாசல் மேலமுத்துடையான்பட்டி கே.கே. நகரில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு புகுந்து விட்டதாக அப்பகுதியினர் தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் அளித்தார். இதன்பேரில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் சின்னக்கண்ணு தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் அடைத்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.