பஸ்சுக்குள் குடைபிடித்தபடி பயணித்த பொதுமக்கள்

அன்னவாசலில் மழை பெய்ததால் பஸ்சுக்குள் குடைபிடித்தபடி பொதுமக்கள் பயணித்தனர்.

Update: 2022-06-10 18:58 GMT

அன்னவாசல்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல பஸ்கள் பழுதாகியும், சேதமடைந்தும் இருப்பதாக பயணிகள் குறை கூறுகின்றனர். அத்துடன் சில பஸ்களில் மேற்கூரைகள் சிதைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல், இலுப்பூர் வழியாக திண்டுக்கல்லுக்கு 50- க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஒரு பஸ் புறப்பட்டு சென்றது. அப்போது அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் மழை பெய்தது. அப்போது அன்னவாசல் அருகே பஸ் சென்றபோது அந்த பஸ்சின் மேற்கூைரயில் உள்ள ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே விழுந்தது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் பஸ்சுக்குள் இருந்த சில பயணிகள் குடைபிடித்தபடி பயணித்தனர். இதை ஒரு சிலர் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்