இருகாலூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

இருகாலூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2023-01-26 21:45 GMT

சங்ககிரி:

கிராமசபை கூட்டம்

சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் இருகாலூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் வட்டார சேவை மைய கட்டிடம் அருகில் நடந்தது. ஊராட்சி தலைவர் சகுந்தலா தலைமை தாங்கினார்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், ஊராட்சி செயலாளர் வரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிராம வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தீர்மானம்

இருகாலூர் ஊராட்சி கல்லேரி என்ற ஏரியில் மீன்பிடி குத்தகை ஏலத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர். அதற்கு ஊராட்சி நிர்வாகம் தரப்பில் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு ஊராட்சி தலைவர் சகுந்தலா, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் முத்து ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறக மீன்பிடி ஏல உரிமம் ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்