கிராம வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும்

கிராம வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும்

Update: 2023-05-01 18:45 GMT

கிராம சபை கூட்டத்தில் கிராம வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

கிராமசபை கூட்டம்

கொரடாச்சேரி வட்டாரத்திற்குட்பட்ட பெருமாளகரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மே 1 தொழிலாளர் தினத்தையொட்டி நடக்கும் கிராமசபை கூட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள மக்கள் கலந்துகொண்டு கிராம வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை வழங்கி, கோரிக்கைகளை தெரியப்படுத்த வேண்டும். இதன்மூலம் கிராமங்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும். இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் தவிர்த்தல், தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஊராட்சி வளர்ச்சி திட்டம் மற்றும் இதர தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப்பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து, மகளிருக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கும் வகுப்பினை கலெக்டர் தொடங்கி வைத்தார். கொரடாச்சேரி வட்டாரத்திற்குட்பட்ட பெருமாளகரம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணியினையும், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பதையும் அவர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், ஒன்றியக்குழு தலைவர் உமாபிரியா பாலசந்தர், துணைத்தலைவர் பாலசந்தர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்