குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்

விழுப்புரம் நகராட்சி 9 வது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்

Update: 2022-06-27 17:08 GMT

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட வடக்கு தெரு, மாசிலாமணிபேட்டை, கமலா நகர், மேல்தெரு, முகமதியார் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மேற்கண்ட தெருக்களில் கடந்த 2 மாதங்களாக குடிதண்ணீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு உடல் உபாதையும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. அசுத்தம் நிறைந்தவாறு வரும் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் குடிநீர் கிடைக்காமல் நாங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். இதுகுறித்து பலமுறை நகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் இதுநாள் வரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்