ரூ.60 லட்சம் மோசடி செய்தவர் மீது புகார் அளிக்க வந்த பொதுமக்கள்

ரூ.60 லட்சம் மோசடி செய்தவர் மீது புகார் அளிக்க பொதுமக்கள் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

Update: 2022-10-12 17:28 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஒண்டிகுடிசை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 45), விவசாயி. இவர், நெல் அறுவடை எந்திரம், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை வைத்து வாடகைக்கு விட்டு வந்துள்ளார். மேலும் 4-குரூப் சீட்டுகளும் நடத்தியுள்ளார்.

இதில் அனைத்து முதல் சீட்டுகளையும் அவர் எடுத்துக்கொண்டு உள்ளார். பல்வேறு நபர்களிடம் கடன் தொகை பெற்றுள்ளார். ஆனால் திருப்பி செலுத்தவில்லை. அதேபோல் சீட்டு எடுத்தவர்களுக்கும் உரிய தொகை வழங்கவில்லை.

இதுகுறித்து கிருஷ்ணாபுரம், ஒண்டிகுடிசை, மாமண்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வந்து சீட்டுகள் மற்றும் கடன் தொகையாக ரூ.60 லட்சத்திற்கு மேல் மோசடி செய்த சேட்டு மீது புகார் அளித்தனர்.

புகாரை பெற்ற போலீசார் தொகை அதிகம் என்பதால் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் தான் புகார் அளிக்க வேண்டும் எனக்கூறி அவர்களை திருப்பி அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்