குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சிமன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கிருஷ்ணராயபுரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சிமன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-12-07 19:00 GMT

காலிக்குடங்களுடன் முற்றுகை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கருப்பத்தூர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரியில் இருந்து கள்ளப்பள்ளியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்றப்பட்டு, குழாய் மூலம் கருப்பத்தூர் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை.

இதனால் அவதி அடைந்த கருப்பத்தூர் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்்பட்ட ெபாதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை கள்ளப்பள்ளி ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் ஊராட்சிதலைவர் மற்றும் பணியாளர்கள் யாரும் அங்கு இல்லை என அவர்களுக்கு தெரியவந்தது.

மறியல் செய்ய முயற்சி

இதையடுத்து அந்த ெபாதுமக்கள் சாலை மறியல் செய்வதற்காக திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், லாலாபேட்டை போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட முயன்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்