பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திங்கள்சந்தையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திங்கள்சந்தை,
திங்கள்சந்தை பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டில் குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு அந்த பகுதி மக்கள் நேற்று பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர், அவர்கள் வார்டு கவுன்சிலர் சரவணன் தலைமையில் திடீரென கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பேரூராட்சி அலுவலகத்தில் கொடுத்தனர். அந்த மனுவில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். புதுக்குளத்தில் உள்ள சேதமடைந்த படிக்கட்டுகளை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது. போராட்டக்காரர்களுடன் பேரூராட்சி தலைவர் சுமன் பேச்சு வார்த்தை நடத்தி அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.