பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்டாத பயனாளிகளை கண்டறியும் பணி தொடங்கியது
பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்டாத பயனாளிகளை கண்டறியும் பணி தொடங்கி உள்ளது.
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளிலும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் புதிய வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறார்கள். இதில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் புதிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் வீடுகள் கட்ட முடியாதவர்கள் இருந்து வருகின்றனர். இதனையடுத்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின்பேரில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற பயனாளிகள் இதுவரை வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளவர்களை கணக்கீடு செய்யும் பணி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக நேற்று பில்லூர் ஊராட்சி முத்தகவுண்டம்பட்டியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்ட முடியாத பயனாளியை ஒன்றிய ஆணையர் சரவணன், ஒன்றிய மேற்பார்வையாளர் ரெங்கரத்தினம், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிபழனி, ஊராட்சியாளர் கலியராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனைகளை வழங்கினர்.