பொதுமக்களை அணுகி பிரச்சினைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யவேண்டும்

நல்ல நிர்வாகம் சிறப்பு குறை தீர்வு வாரத்தையொட்டி, பொதுமகமகளை அதிகாரிகள் அணுகி, பிரச்சினைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார்.;

Update: 2022-12-23 17:55 GMT

நல்ல நிர்வாகம் சிறப்பு குறை தீர்வு வாரத்தையொட்டி, பொதுமகமகளை அதிகாரிகள் அணுகி, பிரச்சினைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நல்ல நிர்வாகம் சிறப்பு குறை தீர்வு வாரம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கிறது. குறிப்பாக இந்த சிறப்பு குறை தீர்வு வாரம் 19-ந் தேதி முதல் 25-ந் தேதிவரை கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் பொதுமக்கனின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் எஞ்சியுள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை அணுகி அதன் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து துறைகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உடனுக்குடன் நிவர்த்தி

நீண்ட நாள் பிரச்சினைகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து, அதனை நிவர்த்தி செய்தால் பொதுமக்கள் நிர்வாகத்தை பாராட்டுவார்கள். நீண்டநாள் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதை வெற்றி கதைகளாக தயாரித்து வெளியிட வேண்டும். இது போன்ற புதிய விஷயங்களை இந்த வாரங்களில் மேற்கொண்டு அதனை ஆவணப்படுத்த வேண்டும்.

பொதுவாக எல்லா நாட்களிலும் பொதுமக்கள் அலுவலர்களை அணுகி பிரச்சினைகளை தெரிவித்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர் நிகழ்ச்சிதான். சிறப்பு குறைதீர்வு வாரத்தில் மேலும் கவனமுடனும், அக்கறையுடனும் அலுவலர்கள் பொதுமக்களை அணுகி அவர்கள் திருப்தி அடையும் வகையில் பிரச்சினைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார். சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் தாரகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்