தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

அரியலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.;

Update: 2023-03-15 18:45 GMT

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் கிராமம் மற்றும் நகர்புறத்திலுள்ள படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) அரியலூர் அரசு கலை கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த வேலை வாய்ப்பற்ற 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்கள் (இருபாலரும்) கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். மேலும், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் 20-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்பினை வழங்க உள்ளனர். வருகை தரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். அத்துடன் தங்களது சுய விவர குறிப்பு, ஆதார் அட்டை நகல், கல்வி சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்